Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலை போட்டோவுடன் நடுரோட்டில் ஆடு வெட்டி பலி.. தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்..

அண்ணாமலை போட்டோவுடன் நடுரோட்டில் ஆடு வெட்டி பலி.. தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 July 2024 3:32 PM GMT

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் போட்டியிட்டார், இறுதிவரை அவர் திமுக வேட்பாளருக்கு நல்ல ஒரு போட்டியை கொடுத்து வெற்றி வாய்ப்பை கடைசி நிமிடத்தில் நழுவவிட்டார். கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வியுற்றதன் காரணமாகவும், திமுக தன்னுடைய வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் இண்டியா கூட்டணி ஆதர்வாளர்கள் சிலர் நடுரோட்டில் ஆட்டின் கழுத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி பின்னர் வீச்சருவாளால் ஆட்டின் தலையை ஆக்ரோஷமாக வெட்டி கொடுமை படுத்தி அதன் ரத்தத்தை ரோட்டில் தெளித்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதன் காரணமாக இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது, பா.ஜ.க பிரமுகரும், வழக்கறிஞருமான மோகன்தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறும்போது, "பொது இடத்தில் ஆடு வெட்டியது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி கூறும்போது, "இது போன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம் மட்டுமல்லாது, இது விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும். இது போன்ற சம்பவங்கள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். அரசியல் தலைவர்களின் புகைப்படத்தை அணிவித்து மக்கள் மத்தியில் விலங்குகளை வெட்டுவது உடனடியாகத் தடுக்க வேண்டும்" என்று வாதிட்டார்.


இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு, சாலையில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டி வெட்டியதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று கண்டித்ததோடு, இந்தச் செயலுக்கு அதிருப்தியும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. திமுகவினரின் இந்த ஒரு செயலுக்கு நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல், இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்களின் மீது என்ன நடவடிக்கையை எடுத்து இருக்கிறீர்கள்? அதற்கான விளக்கத்தையும் கொடுத்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: The Commune News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News