Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஆட்சியில் கொலைக்களமாக மாறி உள்ள தமிழ்நாடு: எம்.ஜி.ஆர் பாடலைச் சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

தி.மு.க ஆட்சியில் கொலைக்களமாக மாறியுள்ள தமிழ்நாடு பற்றி விமர்சித்து எம்.ஜி.ஆர் பாடலை உதாரணமாக காட்டி எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை கூறியுள்ளார்.

தி.மு.க ஆட்சியில் கொலைக்களமாக மாறி உள்ள தமிழ்நாடு: எம்.ஜி.ஆர் பாடலைச் சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!
X

KarthigaBy : Karthiga

  |  20 July 2024 1:56 PM GMT

தி.மு.க ஆட்சியில் கொலைக்களமாக மாறி உள்ள தமிழ்நாடு பற்றி விமர்சித்து எம்.ஜி.ஆர் பாடலை உதாரணமாக காட்டி எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்."ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி" என்று பாடினார். புரட்சித் தலைவர். 'புரட்சித்தலைவரின் ரசிகன் நான் என்றும், அவரது படங்களை பார்த்தே வளர்ந்தவன் நான்' என்றும் தேவைக்கேற்றார்போல், சந்தர்ப்பத்திற்கேற்றார்போல் சொல்லக்கூடிய இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார்.

விடியா திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும், பிப்ரவரி மாதம் 64 கொலைகளும், மார்ச் மாதம் 53 கொலைகளும், ஏப்ரல் மாதம் 76 கொலைகளும், மே மாதம் 130 கொலைகளும், ஜூன் மாதம் 104 கொலைகளும், ஜூலை 17-ஆம் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

'அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்' என்ற இருமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துவார்களேயானால், 'அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்' என்பதை நினைவூட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


SOURCE :NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News