பட்ஜெட்டின் சிறப்பம்சமாக ஒன்பது முன்னுரிமைத் திட்டங்களை அறிவித்த நிதி அமைச்சர்!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25க்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒன்பது முன்னுரிமை திட்டங்கள் குறித்து காண்போம்.
By : Karthiga
பிரதமர் மோடி அரசு மக்களின் வலுவான நம்பிக்கையோடு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மோடி 3.0-வின் முதல் பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். நிதி அமைச்சர் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஒன்பது முன்னுரிமைத் திட்டங்களை அவர் அறிவித்தார்.
9 முன்னுரிமை திட்டங்கள்:
1. வேளாண் உற்பத்தி
2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு
3. அனைவரையும் உள்ளடக்கிய மனித வள மேம்பாடு
4. உற்பத்தி மற்றும் சேவைத் துறை
5. நகர்ப்புற வளர்ச்சி
6. எரிசக்தி பாதுகாப்பு
7. உட்கட்டமைப்பு மேம்பாடு
8.புத்தாக்க தொழில்துறை
9. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்.
திறன் மேம்பாட்டு கடன் திட்டத்தால் ஆண்டுக்கு 25 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள். மகளிர் மேம்பாட்டிற்கு மூன்று லட்சம் கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.