பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம்... பட்ஜெட்டில் இடம் பெற்ற அட்டகாசமான அம்சம்..
By : Bharathi Latha
2024-25ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில், நாட்டின் உட்கட்டமைப்பு துறைக்கான மூலதனச் செலவு இலக்கை இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் அறிவித்த ரூ.11.11 லட்சம் கோடியை மோடி அரசு தொடர்ந்து தக்கவைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாகும். இதன் மூலம் உட்கட்டமைப்பு துறைக்கான நிதி ஆதரவை வலுப்படுத்த அரசு உறுதி கொண்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் உள்கட்டமைப்புக்கான பாதை தொடர்ந்து வளர்ச்சி அடைய உள்ளது. இதன் மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு கொள்கை தொடர்ந்து பலன் அளிக்க உள்ளது. இதேவேளையில் நடுத்தர மக்களின் நலனை மேம்படுத்துவதில் முக்கியமான திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்து இருக்கிறார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதான் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சுமார் ரூ.10 லட்சம் கோடி அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார். இது இந்தியாவில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைய இருக்கிறது. இந்தத் திட்டத்தின் நகர்ப்புற 2.0 என்ற புதிய கட்டம் மூலம், வீடு இல்லாத ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தப்படும்.
Input & Image courtesy:News