Kathir News
Begin typing your search above and press return to search.

நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்... பட்ஜெட்டின் மூலம் விலை குறைய இருப்பது என்னென்ன?

நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்... பட்ஜெட்டின் மூலம் விலை குறைய இருப்பது என்னென்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 July 2024 11:47 AM GMT

நிதியமைச்சர் சமர்ப்பித்த இந்திய பட்ஜெட் 2024, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் விதமாகவும், டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) ஆதரிப்பது மற்றும் சமூக நலனுக்கு முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றில் தெளிவான முக்கியத்துவத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது.


அதன்படி 2024 பட்ஜெட் அறிவிப்பில், புற்றுநோய் மருந்துகள் மற்றும் மொபைல் போன்களின் சில்லறை விலையை குறைக்கும் நோக்கில் சுங்க வரிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, தோல் பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் மீதான இறக்குமதி வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல், அம்மோனியம் நைட்ரேட் மற்றும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்து இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News