Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி : மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

நேற்று மத்திய பட்ஜெட் நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதன் எதிரொலியாக தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி : மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!
X

KarthigaBy : Karthiga

  |  24 July 2024 11:43 AM GMT

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 குறைந்து ஒரு கிராம் 6490க்கு விற்பனை ஆகிறது. அதன்படி பவுனுக்கு 480 குறைந்து ஒரு பவுன் 51,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 92க்கு விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 92,000 ஆக உள்ளது.

முன்னதாக நேற்று பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான அறிவிப்பு வெளியான உடனேயே தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 275 குறைந்து ரூபாய் 6550 க்கும், பவுனுக்கு 2200 குறைந்து 52,400க்கும் விற்பனையானது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.இது வியாபாரிகள் நடுத்தர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இந்த விலை சரிவு மேலும் கணிசமான அளவு வரை நீடிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


SOURCE : News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News