திமுக ஆட்சி முன்னேற்றம் இல்லை, பின்னடைவு மட்டுமே: மின்கட்டண உயர்வுக்கு எதிராக பழைய காலத்தை ஞாபகப்படுத்தி அதிமுகவினர் போராட்டம்!
மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கும் விடியா திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் நடு ரோட்டில் அமர்ந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.
By : Karthiga
மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களை நேரடியாகவும், மின் கட்டண உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வால் மறைமுகமாகவும் வாட்டி வதைக்கின்ற திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசை கண்டித்து அ.இ.அ.தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றது. அதிமுக தொண்டர்கள் நடுரோட்டில் அமர்ந்து கொண்டு மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தும் பழங்கால சாதனங்களை வைத்துக்கொண்டு அம்மி அரைப்பது, கொடைக்கல்லில் மாவரைப்பது, இஞ்சி நசுக்குவது, உரல் உலக்கையை வைத்துக் கொண்டு நெல் இடிப்பது போன்ற செயல்களை செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டனர்.
'சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' என்று ஸ்டாலின் கூறிய நக்கலான வாசகத்தை அதிமுகவினர் நினைவுப்படுத்தி, இப்பொழுது திமுக அரசு அவ்வாறு தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கேலி விமர்சனம் செய்தனர். அன்று எதிர்க்கட்சித் தலைவராக "ஷாக் அடிப்பது மின்சாரமா? மின் கட்டணமா?" என்று திரு. ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு, இன்று முதல்வராக இருக்கும் அவருக்கு, இந்த விடியா ஆட்சியில் "ஷாக்அடிக்கும்_மின்கட்டணம்" என்று மக்கள் பதில் அளிக்கின்றனர்.
நிர்வாகத் திறமையற்ற தி.மு.க அரசு ஒருபுறம் மின் கட்டண சுமையை மக்கள் மீது ஏற்றியதுடன், மறுபுறம் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகின்றனர்.தமிழகம் எங்கும் போதைப்பொருள் கிடைக்கும் விடியா திமுக ஆட்சியில், பருப்பு,பாமாயில்,எங்கே ஸ்டாலின் என்று மக்கள் கேட்கிறார்கள்.மின் கட்டணத்தை உயர்த்தியும் ரேஷன் கடைகளில் பருப்பு , பாமாயில் வழங்கப்படுவதை நிறுத்த முயற்சித்தும் மக்கள் விரோதப் போக்கில் செயல்படும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.