Kathir News
Begin typing your search above and press return to search.

பட்ஜெட்டை விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் தரமான பதிலடி!

ஒரு மாநிலத்தின் பெயரை பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை என்றால் அரசு திட்டங்கள் அந்த மாநிலத்திற்கு கிடைக்காது என்ற அர்த்தம் அல்ல என எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் தரமானபதிலடி கொடுத்துள்ளார்.

பட்ஜெட்டை விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் தரமான பதிலடி!
X

KarthigaBy : Karthiga

  |  25 July 2024 4:37 PM GMT

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆந்திரா மற்றும் பீகாருக்கு அதிக நிதியும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்த மாநிலங்களை ஆளும் கட்சிகளான முறையே தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமம் வகித்து வருகின்றன . இதன் மூலம் எதிர்க்கட்சி ஆறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த மாநிலங்களின் பெயரைக் கூட பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை என்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

மாநிலங்களவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது ஒரு நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என குற்றம் சாட்டினார். அப்போது எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக மிகுந்த ஆவேசத்துடன் அவர் கூறியதாவது :-

குறிப்பிட்ட ஒரு மாநிலத்தின் பெயரை பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை என்றால் அந்த மாநிலத்திற்கு அரசு திட்டங்கள் கிடைக்காது என்று அர்த்தம் இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிலோ அல்லது நேற்று முன்தினம் தாக்கல் செய்த முழு பட்ஜெட்டிலோ நான் பல மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை .அதற்காக அந்த மாநிலங்கள் அரசு திட்டங்களின் பலனைப் பெறாது என்று பொருள் இல்லை. எடுத்துக்காட்டாக மராட்டியத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அந்த மாநிலத்தின் பெயரை இந்த இரண்டு பட்ஜெட்டிலும் நான் குறிப்பிடவில்லை. அதற்காக தகானுவில் அமையுள்ள வாதவன் துறைமுக திட்டத்திற்கு கடந்த மாதம் ரூபாய் 76 ஆயிரம் கோடி ஒதுக்கியதற்கு மந்திரி சபை தடுக்கவில்லை. மராட்டியத்தின் பெயரை நான் பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை என்பதற்காக அந்த மாநிலம் புறக்கணிக்கப்பட்டதா? ரூபாய் 76 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதே போல ஏராளமான மாநிலங்கள் பெரிய திட்டங்களை பெற்றிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் பெயரை பட்ஜெட் உரையில் குறிப்பிடவில்லை என்றால் மத்திய அரசின் திட்டங்களோ நிகழ்வுகளோ உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி போன்ற வெளியில் இருந்து வரும் உதவிகளோ அந்த மாநிலத்திற்கு கிடைக்காது என்பது அர்த்தம் அல்ல .அரசின் சில செலவின அறிக்கை திட்டங்கள் சார்ந்த ஒதுக்கீட்டை தான் கொடுக்கிறது. ஆனால் 'ஐயோ எங்கள் மாநிலத்துக்கு எதுவும் கிடைக்கவில்லை. வெறும் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும்தான் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது, என காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் வேண்டுமென்றே மக்களிடம் தவறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன .

காங்கிரஸ் கட்சி இதுவரை தாக்கல் செய்த அனைத்து பட்ஜெட்டிலும் அனைத்து மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட்டு இருந்ததா என அந்த கட்சிக்கு சவால் விடுகிறேன் .இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. ஒருபோதும் ஏற்க முடியாது .மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்காளத்துக்கு எதுவும் ஒதுக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக கொண்டு வந்த பல திட்டங்களை அந்த மாநில அரசு மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தவில்லை இவ்வாறு நிர்மலா சீதாராமன் சாடினார்.


SOURCE :News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News