Kathir News
Begin typing your search above and press return to search.

'தாயின் பெயரில் ஒரு மரம்' நடும் இயக்கம்.. மோடி அரசு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

தாயின் பெயரில் ஒரு மரம் நடும் இயக்கம்.. மோடி அரசு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 July 2024 3:11 PM GMT

காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையாக ஒவ்வொரு இந்தியரையும் ஒரு மரத்தை நடுவதற்கு அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட இயக்கமான 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பசுமையான, நிலையான எதிர்காலத்தை நோக்கி கூட்டு நடவடிக்கையை வளர்க்கவும் முயல்கிறது. இந்தியா ஒரு நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை பின்பற்றுகிறது, அதன் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் அர்ப்பணிப்புகளுக்கு இணங்க, மோடி அரசாங்கம் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலின் அனைத்து முனைகளிலும் நிலைத்தன்மையை ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக ஐந்து தேசிய பணிகள் மூலம், அவை சூரிய ஆற்றல், ஆற்றல் திறன், நீர் மேலாண்மை, நிலையான விவசாயம் மற்றும் இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.


உலகின் பல பகுதிகளைப் போலவே இந்தியாவும் காலநிலை மாற்றத்தைக் கண்டுள்ளது. நீடித்த வெப்ப அலைகள், அதிகரித்து வரும் வெப்பநிலை, காட்டுத் தீ மற்றும் வெள்ளம் போன்ற பல்வேறு சம்பவங்கள் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தனிப்பட்ட நிலைகளிலும், அவசர நடவடிக்கை தேவை. எனவே கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவையும் இந்தியாவை பசுமையாக மாற்றுவதில் முன்னுதாரணமாக பல்வேறு திட்டங்களுக்கு வழிவகுத்துள்ளனர். அந்த வகையில் தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாயின் பெயரில் மரக் கன்று நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.


இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக தற்பொழுது 2024 ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் 15 லட்சம் மரக்கன்று நடும் இயக்கத்தை மேற்கொள்கிறது. மரக்கன்றுகள் நடும் இயக்கம் 'ஏக் பெட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) இயக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது. முப்படைகள், DRDO, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், சைனிக் பள்ளிகள், தளவாட தொழிற்சாலைகள் போன்ற பாதுகாப்புத் துறை அமைப்புகள் மூலம் இந்த இயக்கம் நடத்தப்படும். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த இயக்கத்தில் பங்கேற்று தமது தாயின் நினைவாக மரக்கன்றை நட்டுள்ளார். "இயற்கையைப் பாதுகாக்கும் இயக்கத்தில் மக்கள் இணைய வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை மேலும் சிறப்பாகவும், ஆற்றல்மிக்கதாகவும் மாற்றுவதில் தீவிரமாக பங்களிக்க வேண்டும்" என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News