Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் அம்ரித் பாரத் திட்டம்: தமிழகம் அடையும் பயன்!....புதுப்பொலிவு பெரும் ரயில் நிலையங்கள்

பிரதமரின் அம்ரித் பாரத் திட்டம்: தமிழகம் அடையும் பயன்!....புதுப்பொலிவு பெரும் ரயில் நிலையங்கள்
X

SushmithaBy : Sushmitha

  |  7 Aug 2024 3:07 AM GMT

நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் நவீனமயமாக்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அரசால் தொடங்கப்பட்டது தான் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்.

இந்தியன் ரயில்வேயில் தினமும் சுமார் 1.8 கோடி பயணிகள் பயணிக்கின்றனர் அவர்களுக்கு போதிய உணவு வசதி, காத்திருப்பரை, 5 ஜி இலவச வைஃபை, எஸ்களேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, நவீன மயமான கட்டமைப்பு ஆகியவற்றை இந்தியன் ரயில்வே நிலையங்களில் மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டது. அதுமட்டுமின்றி கூடுதலான நடைமேடைகள், வாகனங்களை நிறுத்தும் வசதி, சிசிடிவி கேமராக்கள், நுழைவு வாயில்களை பொலிவு பெற செய்தல் ஆகிய பணிகளும் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

அதன்படி இந்த திட்டத்தின் கீழ் 1,309 நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் முதற்படியாக 508 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகளை 616 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அந்தத் திட்டத்தில் முதலில் தமிழகத்தில் ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பெரம்பூர், கரூர், சேலம், தஞ்சாவூர், தென்காசி உள்ளிட்ட 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்த நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டது.

இதனை அடுத்து 2024 பிப்ரவரி மாதத்தில் இந்திய அளவில் 550 ரயில்வே ஸ்டேஷன் கலை அம்ரித் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தவும், 1500 மேம்பாலங்கள், சுரங்கங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் தமிழகத்தில் 32 ரயில்வே ஸ்டேஷனுக்கு ரூபாய் 803.78 கோடி பணிகளும் அடங்கும். அதுமட்டுமின்றி ரூபாய் 476.72 கோடி செலவு 4 மேம்பாலங்கள், 106 சுரங்கப் பாதைகள் கட்டப்படுவதற்கான பணிகளும் துவக்கி வைக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வேயில் மட்டும், சென்னை கடற்கரை, கிண்டி, அம்பத்தூர், மாம்பழம், சென்னை பூங்கா உள்ளிட்ட 18 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதைத் தவிர பழனி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம்,. காரைக்குடி 14 ரயில்வே ஸ்டேஷன்கள் அம்ரித் ரயில்வே ஸ்டேஷனுக்கு தரம் உயர்த்துவதற்கும் 432.84 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி 2023 - 2024 ஆண்டில் அம்ரித் பாரத் நிலையங்கள் தொடர்பான பணிகளில் தமிழகத்திற்கு மட்டும் ரூபாய் 4,100 கோடி செலவிடப்பட்டு கிட்டத்தட்ட 75 ரயில்வே நிலையங்கள் மேம்படுத்தப்படும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் ரூபாய் 6,362 கோடியை பெற்றுள்ளது.

அதோடு ஆறு வந்தே பாரத் ரயில்கள், 77 மாதிரி அம்ரித் ரயில்கள் நிலையங்களும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கோவை மெட்ரோ ரயில் திட்டம் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News