Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி ஆட்சியில் தன் வளர்ச்சியை மட்டுமல்லாமல் பிற நாடுகளின் வளர்ச்சியையும் விரும்பும் இந்தியா!

எந்த நாட்டில் எந்த பிரச்சினை வந்தாலும் முதல் ஆளாக உதவி செய்வது இந்தியா தான். இந்தியா அனைவருடனும் இணைந்து அனைவரது வளர்ச்சியையும் விரும்புகிறது என்ற பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மோடி ஆட்சியில் தன் வளர்ச்சியை மட்டுமல்லாமல் பிற நாடுகளின் வளர்ச்சியையும் விரும்பும் இந்தியா!
X

KarthigaBy : Karthiga

  |  22 Aug 2024 1:53 PM GMT

அனைவருடனும் இணைய விரும்பும் இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது என்று போலந்து நாட்டில் பிரதமர் மோடி பேசினார். இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக போலந்து நாட்டின் தலைநகர் வார்சா சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கு பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசியதாவது:-

எனக்கு கிடைத்த அன்பான வரவேற்புக்கு போலந்து நாட்டு மக்களுக்கு நன்றி. அனைவருடனும் இணைய விரும்பும் இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது. புதிய இந்தியாவின் கொள்கை அனைத்து நாடுகளுடனும் நெருக்கத்தை பேணுவது. இன்று இந்தியா ஒவ்வொருவரின் வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது. மற்றவர்களைப் பற்றி சிந்திக்கிறது. இன்று உலகமே இந்தியாவை 'விசுவ பந்து' என்று மதிக்கிறது. ஜாம்ஷாகிப் நினைவாக இளைஞர் செயல் திட்டத்தை இந்தியா தொடங்கப் போகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 20 போலந்து இளைஞர்கள் இந்தியா வருமாறு அழைக்கப்படுவார்கள். இரக்க குணம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும். எந்த நாட்டில் எந்த பிரச்சினை வந்தாலும் முதலில் உதவி செய்யும் நாடு இந்தியா தான். கொரோனா வந்தபோது இந்தியா முதலில் மனித நேயத்தைக் கூறியது. இப்பகுதியில் நிரந்தர அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது. இந்த நேரத்தில் போர் தேவையில்லாதது. போருக்கான நேரம் இதுவல்ல சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றாக இருக்க வேண்டும். உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது. போரின் போது இந்திய மாணவர்களுக்கு போலந்து உதவியது. அதற்கு இந்தியா தலைவணங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News