Kathir News
Begin typing your search above and press return to search.

'நீட் தேர்வு வந்த பிறகு என் கிராமத்தில் மருத்துவ படிப்பில் சேரும் முதல் ஆள் நான் தான்'- கிருஷ்ணகிரி மாணவரின் நெகிழ்ச்சி பேட்டி!

நீட் தேர்வு வந்த பிறகு தன்னுடைய கிராமத்தில் முதலாவதாக மருத்துவ படிப்பில் சேரும் மாணவர் தான்தான் என்று கிருஷ்ணகிரி மாணவர் நெகிழ்ச்சியோடு பேட்டி அளித்துள்ளார்.

நீட் தேர்வு வந்த பிறகு என் கிராமத்தில் மருத்துவ படிப்பில் சேரும் முதல் ஆள் நான் தான்- கிருஷ்ணகிரி மாணவரின் நெகிழ்ச்சி பேட்டி!
X

KarthigaBy : Karthiga

  |  23 Aug 2024 1:53 PM GMT

"மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2017ஆம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.திமுகவும், காங்கிரஸும் அதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.

2010 ஆம் ஆண்டு நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே, அது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், சுமார் 6 ஆண்டுகள் உச்ச நீதிமன்றமும் பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகுதான் நீட் தேர்வு அவசியம் எனத் தீர்ப்பு வழங்கியது. அதன் பின், முந்தைய அதிமுக அரசும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கோச்சம்பள்ளி சைதாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் பைந்தமிழரசன் பெரிய அளவில் எந்த பயிற்சி மையத்துக்கும் செல்லாமல் வீட்டுக்கு அருகில் குறைந்த செலவில் சொல்லித் தரக்கூடிய ஒருவரின் உதவியுடன் நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 546 மதிப்பெண் எடுத்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கோவை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பை தேர்வு செய்துள்ளார்.

தன்னுடைய கிராமத்தில் நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவ படிப்பில் சேரும் முதல் ஆள் நான்தான் என்றும் மூன்றாம் வகுப்பில் உதித்த டாக்டர் ஆசை இப்போது நிறைவேறியுள்ளது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.நீட் தேர்வை ரத்து செய்ய திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் முயல்கின்றார். இதுதான் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது திமுக அரசு காட்டும் பரிவா? திமுக அரசு தான் பதில் கூற வேண்டும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News