Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: புதிய ஓய்வூதிய திட்டத்தில் உயர்ந்தது மத்திய அரசின் பங்களிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: புதிய ஓய்வூதிய திட்டத்தில் உயர்ந்தது மத்திய அரசின் பங்களிப்பு
X

SushmithaBy : Sushmitha

  |  25 Aug 2024 3:29 PM GMT

ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த புதிய ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் ஒன்றாம் தேதி அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி, ஒரு மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன்பு அவரது 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தின் 50 சதவீதத்தை அவர் ஓய்வூதியமாக பெற உள்ளார். தற்போதுள்ள ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10% ஆகவும் மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பானது 18 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும், இதன் மூலம் சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

திட்டம் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது:

1. 50 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம்

2. உறுதி செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம்

3. உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்

50% உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் :

ஓய்வூதியத்திற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதமாக கணக்கிடப்படும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்கள் இந்த ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள்.

உறுதி செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம் :

ஒரு ஊழியர் இறந்துவிட்டால், அவர் இறப்பதற்கு முன்பு அவர்கள் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.

உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் :

குறைந்தபட்சம் 10 வருடங்கள் சேவையில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ.10,000 இது உத்தரவாதமாக இருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News