விமான பயணத்தில் இஸ்ரோவின் புதிய தொழில்நுட்பம்!
இந்தியாவில் விமான பயணத்தின் போது இணையதள சேவையை பயன்படுத்துவதற்கான முயற்சியில் இஸ்ரோ இறங்கி உள்ளது.
By : Karthiga
இந்தியாவில் விமான பயணத்தில் இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. காரணம் விமான நிலையங்களில் இருந்து விமானங்களுக்கு கிடைக்க வேண்டிய தகவல்கள் தடைபடக்கூடும் என்பதால் இந்த வசதி இல்லாமல் இருந்து வருகிறது .இந்திய விமானங்களில் இணைய இணைப்பைப் பெற சில ஆண்டுகளுக்கு முன்பு விமானங்களை அனுமதித்தது .
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த தகவல் தொடர்பு நிறுவனமான 'வியாசாட்' என்ற உலகளாவிய செயற்கைக் கோள் தகவல் தொடர்பு நிறுவனம் இந்திய வானத்தில் இணைய இணைப்பை வழங்க முடியும் என்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பான செயற்கைக்கோளை விண்ணில் ஏவஉள்ளது .எல்லாம் சரியாக நடந்தால் அதன் மிக உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஜி-சாட்டு 20 துணையுடன் விமானத்தில் இணையதள சேவையும் சாத்தியமாகும்.
இஸ்ரோவின் கீழ் செயல்படும் பெங்களூருவில் உள்ள யூ.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தால் இந்த உயர் செயல்திறன் செயற்கைக்கோள் உருவாக்கப்படுகிறது. இந்த உயர் செயல்திறன் செயற்கைக்கோள் என்பது பாரம்பரிய செயற்கைக் கோள்களை விட அதிக விகிதத்தில் தரவை அனுப்பக்கூடிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய இணைப்பு வழங்குவது மட்டுமின்றி ஐந்தில் ஒரு பங்கு திறனில் விமானத்தில் இணையதள சேவையை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொலைதூர இடங்களை இணைப்பது என்பது உலகளாவிய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான வியாசாட் இன்க் இன் ஒரு பெரிய நோக்கமாகும். இது ஏற்கனவே இந்திய ஆயுதப்படைகளுக்கு நம்பகமான இணைப்பை வழங்குகிறது. இருப்பினும் இந்தியாவில் விமானத்தில் இணையம் இல்லாதது என்ற பெரிய குறையை நிவர்த்தி செய்ய தற்போது வியாசாட் மற்றும் இஸ்ரோ இணைந்துள்ளது. இதன் மூலம் விரைவில் சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.