Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான பார்லே-ஜி'யின் விளம்பரம்: சமூக வலைதளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான பார்லே-ஜியின் விளம்பரம்: சமூக வலைதளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!
X

SushmithaBy : Sushmitha

  |  4 Sept 2024 6:50 PM IST

வருகின்ற ஏழாம் தேதி இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதற்கடவுளான விநாயகர் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தி. அந்நாளை அனைவரும் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நாட்டின் மூளை முடுக்கெல்லாம் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரின் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் பிரம்மாண்டமாக நடந்து மூன்றாம் நாள் கடலில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இது போன்ற பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகின்ற விழாக்களை முன்னிட்டு ஜவுளித்துறை இனிப்பு மற்றும் மற்ற வணிக துறைகள் தங்கள் புது விளம்பரங்களை அறிமுகப்படுத்தி தங்கள் வணிகத்தை பெருக்க முயற்சிப்பார்கள்.

அந்த வகையில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 90களில் பிரபலமான பிஸ்கட்டாக அறியப்படுகின்ற பார்லே ஜி ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரம் தற்போது பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. அந்த விளம்பரத்தில் ஒரு சிறுமி, சிறுவர்கள் விநாயகர் சிலையை கடையிலிருந்து வீட்டிற்கு வாங்கி செல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறாள். பிறகு அந்த சிறுமியும் தாயும் விநாயகர் சிலையை வாங்கிய பிறகு விநாயகர் சிலையை எடுத்துச் செல்வதற்காக சிறுவர்களை அந்த தாய் அழைக்கிறாள். அதைக் கண்ட சிறுமி நாம் ஏன் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லக் கூடாதா என கேட்க, அதற்கு அந்த கடைக்காரன் விநாயகர் சிலையை ஆண்களும் சிறுவர்களும்தான் எடுத்துச் சொல்ல வேண்டும். பெண்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறுகிறார்.

அப்பொழுது கடைக்காரரின் பேச்சை குறிப்பிட்ட ஒரு இளைஞன் எனது அத்தை ஏன் விநாயகரை வீட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடாது என கேட்க, அதற்கு அந்த கடைக்காரர், முதியவர் சிறுவர்கள் மட்டுமே விநாயகரை வீட்டிற்கு எடுத்துச் செல்வதுதான் பாரம்பரியம் என்று கூறுகிறார். இதனை அடுத்து அந்த இளைஞன் அனைவரிடமும் இது குறித்து மிக சத்தமாக பேச தொடங்குகிறார், அதாவது எனக்கு ஒரு விஷயத்தை சொல்லுங்கள் பண்டிகை முடிந்தவுடன் விநாயகரை வீட்டிற்கு எடுத்துச் செல்வது யார் என அவன் கேட்க அதற்கு அம்மாக்கள், விநாயகரின் தாய் கௌரி தான் என்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நமது பெண்களும் விநாயகரை எடுத்து வரட்டுமே என அவன் கூறுகிறான். இந்த முறை தாயுடன் விநாயகர் வீட்டிற்கு வருவார் மேலும் தாயுடனே திரும்புவார் என்று கூறுகிறான் அதற்கு சில பெண்கள் அவனது கருத்தை மறுக்க, நாம் எல்லாரும் எல்லா விஷயங்களையும் விநாயகரிடம் இருந்து தான் தொடங்குகிறோம் அதனால் இந்த புதிய வழக்கத்தையும் அவரிடம் இருந்து தொடங்கக் கூடாதா என்று கேட்கிறான்.

இந்த வீடியோ தான் தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளம்பி உள்ளது.. ஏனென்றால் விநாயகரை பெண்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இந்து மதம் என்றும் சொல்லவில்லை ஆனால் பார்லேஜி நிறுவனம் இந்துக்களிடம் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக கூறி தவறான கருத்தை பரப்பும் வகையில் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது எனவும் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.


ஒரு நெடிசன், கணபதியை ஆண்கள் மட்டுமே வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்று கூறப்படுகின்ற இந்த நிகழ்ச்சி நிரல் முற்றிலும் தவறானது. பார்லேஜி நிறுவனத்தால் காட்டப்படுகின்ற இந்த பாரம்பரியம் எதுவும் இந்து மதத்தில் கிடையாது! என்று பதிவிட்டுள்ளார்.


மற்றொருவர், இந்த விளம்பரம் சுத்தமான புல்ஷ் நான் இதை நான் கேள்விப்பட்டதோ பார்த்ததோ இல்லை. அத்தகைய பாரம்பரியம் இல்லை. இது போன்ற விளம்பரங்களுக்கு யார் பச்சை விளக்கு அளித்தது எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இதுபோன்று இன்னும் பல ஐடிகளில் பார்லேஜியின் விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News