அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம்.. ஆன்மிகச் சொற்பொழிவாளர் சர்ச்சை பேச்சு பின்னணியா?
By : Bharathi Latha
சென்னையில் கடந்த நாட்களுக்கு முன்பு, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர் மற்றும் பேச்சாளரான மகாவிஷ்ணு என்பவர் பங்கேற்று சொற்பொழிவு உரை ஆற்றி இருக்கிறார். இந்த நிலையில், மகாவிஷ்ணுவின் சொற்பொழிவின் போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கவைத்தது மட்டுமின்றி, அவரது பேச்சைக் கேட்டு பலர் கண்ணீரும் விட்டுள்ளனர்.
நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, யோக தீட்சை தருகிறேன் என்றெல்லாம் பேசியுள்ளார். மேலும் இப்படி சொற்பொழிவின் போதே மகாவிஷ்ணு அவர்களின் பேச்சை அந்தப் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் கண்டித்து நிறுத்தும்படி அறிவுரை கூறியிருக்கிறார்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்று இருக்கிறது. பிறகு அனைத்து ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரை சமாதானம் செய்து பிறகு சொற்பொழிவை தொடர்ந்து நடத்த இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ தனது யூடியூப் பக்கத்தில் மகாவிஷ்ணு வெளியிட்டுள்ளார்.
வீடியோ வெளியானதும், பலரும் எதிர்ப்பு தெரிவித்துடன், கண்டனமும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி என்று பதிவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பள்ளிக்கு சென்று, ஆய்வு நடத்தியுள்ளார். மேலும், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம், கொல்வில் பாதகை அரசுப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து ஆணை பெற்று உள்ளார்.
Input & Image courtesy:The Commune News