Kathir News
Begin typing your search above and press return to search.

யோகா மனித வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த தொழில்நுட்பம்; விளையாட்டுப் போட்டிக்கானது அல்ல! - சத்குரு கருத்து!

யோகா மனித வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த தொழில்நுட்பம்; விளையாட்டுப் போட்டிக்கானது அல்ல! ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகா இடம் பெறுவது குறித்து சத்குரு கருத்து

யோகா மனித வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த தொழில்நுட்பம்; விளையாட்டுப் போட்டிக்கானது அல்ல! - சத்குரு கருத்து!
X

SushmithaBy : Sushmitha

  |  12 Sep 2024 7:51 AM GMT

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகாவும் ஒரு விளையாட்டாக இடம்பெற இருப்பதைக் குறித்து சத்குரு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘யோகா ஒருவருடன் மற்றொருவர் போட்டி போட்டு செய்யக் கூடிய விளையாட்டாக இருக்க முடியாது. மனிதர்களை எல்லையற்ற உணர்திறன் மற்றும் வாழ்க்கை அனுபவத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி மற்றும் சுய-பரிணாம வளர்ச்சிக்கான தொழில்நுட்பம்’ என அவர் கூறியுள்ளார்.

இது குறித்த அவரின் எக்ஸ்தள பதிவில் ‘அடிப்படையில் போட்டி விளையாட்டுகளின் அரங்காக இருக்கும் ஒரு இடத்திற்குள் 'யோகா' நுழைவது மிகுந்த வேதனை மற்றும் ஏமாற்றத்தை அளிக்கிறது. யோகா ஒரு போட்டியாக இருக்க முடியாது. யோகா என்பது, மனிதர்களை வரையறுக்கப்பட்ட சாத்தியங்களிலிருந்து எல்லையற்ற உணர்திறன் மற்றும் வாழ்க்கை அனுபவத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி மற்றும் சுய-பரிணாம வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் ஆகும். இதை வேறு யாருடனும் போட்டியாக செய்யக்கூடாது. இதன் மூலம், சக்திவாய்ந்த யோக அறிவியலை, மற்றொருவரை விட சிறப்பாகச் செய்ய முயற்சிக்கும் சர்க்கஸ் போன்ற செயல்முறையாக நாம் குறைத்து விடுவோம். யோகாவின் அடிப்படை விழிப்புணர்வைப் பற்றியது, ஒப்பீடு செய்வதையும் போட்டி போடுவதையும் பற்றியது அல்ல. யோக அறிவியலின் பிறப்பிடமாக விளங்கும் நாகரிகமாக, அது ஒரு அபத்தமான விளையாட்டாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விவேகம் இருக்கும் என்று நம்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

https://x.com/Sadhguru Tamil/status/1833815456274067691

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44 ஆவது பொதுக் கூட்டம் சமீபத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகாவும் இடம்பெறும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தற்போது சத்குரு அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News