Kathir News
Begin typing your search above and press return to search.

கணபதியை சிறையில் அடைத்த கர்நாடகா காங்கிரஸ்: லெஃப்ட் ரைட் வாங்கிய பிரதமர் மோடி!

கணபதியை சிறையில் அடைத்த கர்நாடகா காங்கிரஸ்: லெஃப்ட் ரைட் வாங்கிய பிரதமர் மோடி!
X

SushmithaBy : Sushmitha

  |  15 Sep 2024 12:48 PM GMT

கர்நாடக மாநிலம் மாண்டியா நாகமங்கலா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தகர்க்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விநாயகர் சிலையை பக்தர்கள் எடுத்துச் சென்ற பொழுது பிற சமூகத்தினர் கற்களை வீசி தாக்கினர். இது இரு சமூகத்தினர் இடையே வகுப்புவாத பிரச்சனையை தூண்டியதோடு, தீ வைப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சியாக மாறியது. இந்த விவகாரத்தின் இறுதியில் கர்நாடக போலீஸ் விநாயகர் சிலையை வானில் வைத்து பூட்டிய சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவின் குருஷேத்ராவில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, போலீஸ் வேனுக்குள் அடைக்கப்பட்டிருந்தார் கணேஷ். கணேஷ் உற்சவத்தின் மத ஆர்வத்தை காங்கிரஸ் கட்சி தனது 'அசிங்கமான செயல்களால்' கெடுத்துவிட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும், நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் போது, கொண்டாட்டங்களை முடக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

அதுமட்டுமின்றி, ஒரு நாள் முன்பு, மாண்டியா மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது கல் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்து ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக போலீஸார் செயல்பட்டதால், கர்நாடகாவின் பெங்களூருவில் ஒரு இந்து தெய்வம் கைது செய்யப்பட்டது. பெங்களூரு போலீசார் 40 போராட்டக்காரர்களையும் கைது செய்தது மட்டுமின்றி, விநாயகர் சிலையை எடுத்துச் சென்று போலீஸ் வேனுக்குள் வைத்தனர்.

இதனை பெங்களூரு தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சுர்வ்யா, போலீஸ் வேனில் பூட்டிய விநாயகரின் படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். காங்கிரஸ் அரசு இந்து தெய்வங்களை அவமதிப்பதாகவும், கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை சிறுமைப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Source - Commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News