Kathir News
Begin typing your search above and press return to search.

மண்டபம் - ராமேஸ்வரம் இடையே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம்: பிரதமர் மோடி தலைமையில் திறப்பு!

அக்டோபர் இரண்டாம் தேதி மண்டபம் - ராமேஸ்வரம் இடையே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மண்டபம் - ராமேஸ்வரம் இடையே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம்: பிரதமர் மோடி தலைமையில் திறப்பு!
X

KarthigaBy : Karthiga

  |  24 Sep 2024 5:03 PM GMT

மண்டபம் - ராமேஸ்வரம் இடையே பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதன் மூலம் கடந்த 22 மாதங்களாக ராமேஸ்வரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது .இது ராமேஸ்வரம் மக்களுக்கும் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும் .

புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க தமிழகம் வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அப்போது சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்டோபரில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியிருந்த நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. வங்க கடலின் குறுக்கே சுமார் 2.05 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள் ராமேஸ்வரத்தை ரயில் பாதை வழியாக இணைக்கும் ஒரே பாதையாக இது இருக்கும்.

நாட்டிலேயே செங்குத்தாக தூக்கி இறக்கும் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டிருக்கும் முதல் ரயில்வே பாலம் இது என்று அதிகாரிகள் அறிவித்தனர். இதனை ரயில்வே ரூ. 535 கோடி செலவில் கட்டி முடித்துள்ளார். தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதால், இந்த பாலம் திறந்து வைக்கப்படும் என்றும், அக்டோபர் இரண்டாம் தேதி வருவது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News