Kathir News
Begin typing your search above and press return to search.

கிராமப்புறங்களில் சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கு சட்டப்பூர்வ சான்றிதழ் மற்றும் ஒவ்வொரு தாலுகாவிலும் ஆயுஷ் மருந்தகம்- மத்திய அரசு முடிவு!

கிராமப்புறங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கு சான்றிதழ் அளித்து சட்டபூர்வமாக அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் துறை மந்திரி பிரதாப் ராவ் யாதவ் தெரிவித்தார்

கிராமப்புறங்களில் சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கு சட்டப்பூர்வ சான்றிதழ் மற்றும் ஒவ்வொரு தாலுகாவிலும் ஆயுஷ் மருந்தகம்- மத்திய அரசு முடிவு!
X

KarthigaBy : Karthiga

  |  29 Sep 2024 12:14 PM GMT

ஆயுர்வேதா ,யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ துறைகளை இணைத்து ஆயுஷ் அமைச்சகம் இயங்கி வருகிறது. இந்த அமைச்சகத்தின் 100 நாள் சாதனைகளை மத்திய ஆயுஷ் துறை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் நேற்று வெளியிட்டார் .இதில் திருச்சியில் பேசும் போது அவர் கூறியதாவது :-

நாட்டின் தொலைதூர கிராமப்புறங்களில் ஏராளமான வைத்தியர்கள் உள்ளனர் .அவர்கள் முறையான கல்வி இல்லாத போதிலும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குகிறார்கள். அந்த வைத்தியர்களுக்கு சான்றிதழ் எடுத்து சட்ட பூர்வமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வைத்தியர்களுக்கு அவர்களின் மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளை அங்கீகரிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும் .அவர்களின் கூற்றுகள் உண்மையானதென கண்டறியப்பட்டால் காப்புரிமை பெறுவதற்கு அவர்களுக்கு அரசு உதவும்.

மேலும் இத்தகைய வைத்தியர்களின் மருத்துவ முறைகளை பெரிய அளவில் பயன்படுத்த சிறிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படும். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் ஆயுஷ் மருந்தகங்கள் கிடைக்காத பிரச்சனை உள்ளது. இதை கலைவதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் ஆயுஷ் மருந்தகம் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் திறக்கப்படும். இதில் முதலாவது மருந்தகம் டெல்லியில் உள்ள இந்திய ஆயுர்வேதா நிறுவனத்தில் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி திறக்கப்படும் .

இந்த ஆயுஷ் மருந்தகங்களில் தூய்மையான மற்றும் நம்பகமான மருந்துகள் கிடைக்கும் .இந்த மையங்கள் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பில் திறக்கப்படும். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆயுஷ் சிகிச்சையையும் சேர்க்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இது விரைவில் முடிவடையும் .சுமார் 150 சிகிச்சை முறைகள் இதில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதாப் பிராவ் ஜாதவ் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News