மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரின் மனம் கவர்ந்து பாராட்டு பெற்ற சாதனைப் பெண்கள்!
பாம்பு கடியால் தந்தை பாதிக்கப்பட்டு இறந்ததால் மூலிகை தோட்டம் அமைத்த மதுரை பெண்ணுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
By : Karthiga
பிரதமர் மோடி தனது மனதின் குரல் உரையில் மதுரையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண்மணிக்கு பாராட்டு தெரிவித்தார். அது பற்றி பிரதமர் மோடி கூறியதாவது :-
நம்மைச் சுற்றி எந்த ஒரு துன்பத்திலும் பொறுமையை இழக்காத சிலர் இருக்கிறார்கள் .அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவரான சுபஸ்ரீ தனது முயற்சியால் அரிய மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகள் கொண்ட அற்புதமான தோட்டத்தை உருவாக்கியுள்ளார். இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசிப்பவர் .அவர் ஒரு ஆசிரியையாக இருந்தாலும் மருத்துவ மூலிகைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1980களில் அவருடைய தந்தையை விஷப்பாம்பு கடித்ததில் இருந்து அவரது இந்த பாசம் தொடங்கியது .
அந்த நேரத்தில் பாரம்பரிய மூலிகைகள் அவரது தந்தை ஓரளவு குணமடைய உதவியது. இந்த சம்பவத்துக்கு பிறகு அவர் பாரம்பரிய மருந்துகள் மற்றும் மூலிகைகளை ஆராயத் தொடங்கினார். இன்று மதுரை வெளிச்சியூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட அரியவகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டம் வைத்துள்ளார். இதற்காக அவர் பெரிதும் பாடுபட்டார் .கொரோனா சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகள் மக்களுக்கு கிடைக்கச் செய்தார். அவரது தோட்டத்தைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள். அவருக்கு எனது பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறினார். புதுச்சேரி மாஹே நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தூய்மை பணியைப் பயன்படுத்தி வரும் ரம்யா என்ற பெண்ணுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.