தடைகளை கடந்து கடவுளை நேசிப்போம்.. ஜாமினில் வெளிவந்த மகாவிஷ்ணு பரபர பேட்டி..
By : Bharathi Latha
கடந்த 5 செப்டம்பர் 2024 அன்று, ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின் போது, அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு மறுபிறப்பு, கர்மா மற்றும் திருக்குறள் தத்துவம் குறித்து விரிவுரை ஆற்றினார். இதுபோன்ற மாநில ஆன்மிக உரைகள் சகிக்க முடியாதவை என்று கூறிய திமுக, பாடப்புத்தகங்கள் அறிவியல் கோட்பாடுகளைக் கொண்டவை என்றும், மாணவர்களுக்கு இந்தக் கருத்துக்களை வழங்குவதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்களிப்பதாகவும் வலியுறுத்த பட்டு இருப்பதாக கூறி மகாவிஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்நிலையில் மகாவிஷ்ணு ஜாமினில் வெளிவந்து இருக்கிறார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு ஜாமீனில் விடுதலையாக்கி இருக்கிறார் இதன் காரணமாக அவருடைய ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பூக்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர். பிறகு லில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மகாவிஷ்னுவை பார்த்ததும் கோஷம் போட ஆரம்பித்தவரை போலீசார் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். சிறை வாசலில் சூழ்ந்து கொண்ட ஆதரவாளர்களுக்கு ஆனந்தமாக ஆசிர்வாதம் வழங்கிய மகாவிஷ்னு. தடைகளை கடந்து இறைவனை நேசிப்போம் என்று பேசி இருக்கிறார் சிறையில் இருந்து அவர் வெளியில் வரும் பொழுது அவருடைய ஆதரவாளர்கள் பலரும் அவரை ஆனந்தமாக சூழ்ந்து கொண்டு அவரிடம் ஆசி வாங்கினார்கள்.
Input & Image courtesy: News