Kathir News
Begin typing your search above and press return to search.

விண்வெளித் துறையில் அடுத்த மைல் கல்லை பதிக்க இருக்கும் இந்தியா!

முதல் முறையாக வெள்ளி கோளின் நிலப்பரப்பு குறித்து வரைபடம் தயாரிக்கவும், அங்குள்ள எரிமலைகளை கண்டறிந்து ஆய்வு நடத்தவும் 19 கருவிகளுடன் விண்கலம் ஒன்றை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

விண்வெளித் துறையில் அடுத்த மைல் கல்லை பதிக்க இருக்கும் இந்தியா!
X

KarthigaBy : Karthiga

  |  8 Oct 2024 10:30 AM GMT

சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள கோள் வெள்ளி. இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே, ஒளி மிகுந்ததாகும். சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான வளி மண்டலத்தை கொண்டு கோள் வெள்ளியாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.வெள்ளி பூமிக்கு மிக அருகில் உள்ள கோளாகும். இந்த வெள்ளி கோள் குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்கலம் ஒன்றை அனுப்ப தயாராகி வருகிறது .

இதில் 19 சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி கிரகத்தின் வளிமண்டலம் நிலப்பரப்பு ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய உள்ளது. இந்தப் பணியின் மூலம் முதல் முறையாக வெள்ளியின் நிலப்பரப்பு வரைபடத்தையும் உருவாக்குகிறது. இது எதிர்கால பயணங்களுக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும் .அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் முன்னாள் சோவியத் யூனியனும் 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் அனுப்பப்பட்ட விண்கலங்களால் வெள்ளி மற்றும் வளிமண்டலத்தைப் பற்றிய தகவல்களை அறிய முடிந்தது. இந்தபப் பணிகளால் வெள்ளி கோலின் வளிமண்டல சுழற்றி காலநிலை மற்றும் மேற்பரப்பு அம்சங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.

வெள்ளிக்கு அனுப்பப்படும் 19 சிறப்பு கருவிகள் கிரகத்தை முழுமையாக ஆய்வு செய்ய உதவும். இந்த 19 கருவிகளில் 16 முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் .குறிப்பாக சுவீடன் ,ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து தலா ஒரு கருவி வீதம் மூன்று கருவிகள் உருவாக்கப்படுகின்றன. இவை வெள்ளி கோலின் வளிமண்டல இயக்கவியல் காலநிலை மற்றும் மேற்பரப்பு பொருட்களை ஆய்வு செய்ய உள்ளன. இந்த பணியானது வெள்ளிக்கோள் பற்றிய விரிவான புரிதலை வழங்கும். இந்த ஆய்வின் மூலம் வெள்ளி கோலின் செயலில் உள்ள எரிமலைகள் அல்லது எரிமலை இருக்கும் இடங்கள் மற்றும் பள்ளங்களை கண்டறிய முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News