விடை பெற்ற பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா.. முழு அரசு மரியாதை உடன் தகனம்..
By : Bharathi Latha
உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அக்டோபர் 09 இரவு 11:30 மணிக்கு காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று ஒரு நாள் துக்க நாளாக அனுசரிக்கப் பட்டது. அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக தெற்கு மும்பையில் உள்ள என்சிபிஏ மையத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் ரத்தன் டாடாவிற்கு தன்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.
அங்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஷ் கோயல், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் பட்னாவிஸ், அஜித்பவார், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மஹா., முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் ரத்தன் டாடா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ரத்தன் டாடா உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
Input & Image courtesy: News