போதைப் பொருள்களுக்கு எதிரான வேட்டை தொடரும்- மத்திய மந்திரி அமித்ஷா!
போதைபொருள்களுக்கு எதிரான வேட்டை தொடரும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
By : Karthiga
குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் பகுதியில் டெல்லி மற்றும் குஜராத் மாநில போலீசார் இணைந்து நடத்திய வேட்டையில் ஐந்தாயிரம் கோடி மதிப்பில் 518 கிலோ கோகோயின் போதை பொருள் பிடிபட்டது. இதன் மூலம் டெல்லி மற்றும் குஜராத்தில் கடந்த 15 நாட்களுக்குள் ரூபாய் 13,000 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அமலாக பிரிவினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் போதை பொருளின் கோரப்பிடியில் இருந்து இளைஞர்களை பாதுகாத்து போதை இல்லா பாரதத்தை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. ரூபாய் 13000 கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த டெல்லி போலீசிருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .அதேபோல் குஜராத் போலீசாருக்கும் பாராட்டுகள். போதை மற்றும் போதை பொருள் வணிகத்துக்கு எதிரான வேட்டை எந்த தளர்வும் இல்லாமல் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.