மீன்வளத் துறையில் ட்ரோன் தொழில்நுட்பம்.. மோடி அரசின் அட்டகாசமான முயற்சி..
By : Bharathi Latha
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்திற்குட்பட்ட மீன்வளத் துறை சார்பில், மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்புத் தொழிலில், ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த பயிலரங்கு, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கியான்பவனில் 2024 அக்டோபர் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பீகார் அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ரேணுதேவி, பீகார் துணை முதலமைச்சர்கள் விஜயகுமார் சின்ஹா, சாம்ராட் சவுத்ரி, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்தப் பயிலரங்கு, விஞ்ஞானிகள், மாநில மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள், மீனவப் பெண்கள் ஆகியோரை ஓரிடத்தில் இணைக்கும். மேலும், அதிநவீன மீன்பிடி தொழில் மற்றும் மீன்வளர்ப்பில் ட்ரோன் தொழில்நுட்பம் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு நிதியுதவிக்கான காசோலைகள் மற்றும் விவசாயிகளுக்கு மீன் தீவனம், மீன் விதை உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.
Input & Image courtesy: News