Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் கர்மயோகி சப்தா திட்டம்!

அரசு ஊழியர்கள் நவீன தொழில்நுட்பத்துக்கு பழகிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய அரசின் கர்மயோகி சப்தா திட்டம்!
X

KarthigaBy : Karthiga

  |  20 Oct 2024 1:59 PM GMT

அரசு ஊழியர்கள் தொடர்ச்சியான கற்றல் மற்றும் திறன் வளர்ப்பு கலாச்சாரத்தை அடைவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய கற்றல் வாரம் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தை டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேசமையத்தில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசும் போது அவர் கூறியதாவது :-

கர்மயோகி திட்டத்தின் வழியாக நாட்டில் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கும் மனித வளத்தை உருவாக்குவதே நமது குறிக்கோளாகும். இந்த உணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டால் நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தேசிய கற்றல் வாரத்தின் போது புதிய கற்றல் மற்றும் அனுபவங்கள் வலிமையை வழங்குவதோடு பணி அமைப்புகளை மேம்படுத்தவும் உதவும். இது 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற நமது இலக்கை அடையவும் உதவும். எங்கள் நவீன தொழில்நுட்பத்திற்கு தாங்களாகவே பழகிக்கொள்ள வேண்டும் .இதற்கு கர்மயோகி திட்டம் உதவியாக இருக்கும்.

புதிய யோசனைகளை பெறுவதற்கு ஸ்டார்ட் அப்புகள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் இளையோரிடம் உதவி கேட்கலாம். புதுமையான சிந்தனை மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம். செயற்கை நுண்ணறிவுடன் தகவல் செயலாக்கம் எளிதாகி வருகிறது. இது குடிமக்களுக்கு அனைத்தையும் அறியத் தருவதுடன் அரசின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவை ஒரு வாய்ப்பாக உலகம் பார்க்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இது வாய்ப்பையும் சவாலையும் அளிக்கிறது .ஆர்வம் கொண்ட இந்தியாவை முன்னேற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமாக பயன்படுத்தினால் அது மிகப்பெரும் மாற்றத்திற்கு வடிவமைக்கும் .இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News