மாற்றுத்திறனாளிகளின் உரிமை விதிமுறைகளில் திருத்தம்-மத்திய அரசு அமல்
மாற்றுத்திறனாளிகளின் உரிமை விதிமுறைகளில் புதிய திருத்தத்தை மத்திய அரசு அமல் செய்துள்ளது.
By : Karthiga
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் விதிமுறைகளில் புதிய திருத்தங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை தளத்தில் மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் மற்றும் யூடிஐடி அட்டைகளுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். தங்கள் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் அல்லது சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விதிமுறைகளில் திருத்தங்களின் படி 40 சதவீதத்திற்கும் குறைவான மாற்றுத்திறனுடையவர்களுக்கு வெள்ளை நிறம் கொண்ட யுடிஐடி அட்டை 40 முதல் 79 சதவீதம் வரை மாற்று திறன் கொண்டவர்களுக்கு மஞ்சள் நிறம் கொண்ட யுடிஐடி அட்டையும் 80 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு நீல நிறம் கொண்ட யுடிஐடியும் வழங்கப்படும். மாற்று திறனாளிகளை பரிசோதித்த நாளிலிருந்து மூன்று மாதங்களில் மாற்றுத்திறன் சான்றிதழ்கள் மற்றும் யுடிஐடி அட்டைகளை மருத்துவ அதிகாரிகள் வழங்க வேண்டும் என்பதையும் இந்த விதிமுறைகள் விதிமுறைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஒரு விண்ணப்பம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்கப்படாமல் இருந்தால், இந்த விண்ணப்பம் செல்லுபடியாகாது என்று கருதப்படும். அவ்வாறு கருதப்படும் போது மாற்றுத்திறனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் நிரந்தர மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு நிரந்த சான்றிதழ்கள், உடல்நிலை முன்னேற்றம் ஏற்படக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் சான்றிதழ்கள் வழங்கப்படும். எளிமைப்படுத்தும் நோக்கில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்த பின்னர் இந்த திருத்தங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.