வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பத்தாண்டுகளில் மத்திய அரசு செய்த சாதனை
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பத்தாண்டுகளாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது என மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
By : Karthiga
திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய பள்ளி உளவியல் சங்கம் சார்பில் பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நேற்று தொடங்கியது. இதை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது :-
2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா 2024 ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்தில் உள்ளது .2027 ஆம் ஆண்டில் மூன்றாம் இடத்தை அடைய நாம் முன்னேறி வருகிறோம் .கல்வித்துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வியும் கல்வித்துறையில் உள்ள கட்டமைப்புகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன .மேலும் இந்திய இளைஞர்கள் சர்வதேச அளவில் போட்டி போட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார் .
விழாவில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பேசுவதில் மாணவர்கள் உணர்வு பூர்வமாகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பள்ளி உளவியலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதில் ஆசிரியர்களுக்கும் பெரும் சவால்கள் உள்ளன. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது போல அவர்களின் மன ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர் .தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெற்ற உலகில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கருத்தரங்கம் நடக்கிறது என்றார். இந்த மூன்று நாள் கருத்தற்கு நாளை நிறைவடைகிறது. கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் கருணாநிதி பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எப்.அபுகாசன் தாய்லாந்தில் உள்ள அசம்ப்சன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பார்வதி வர்மா ஆகியோர் மாணவர்களின் மன ஆரோக்கியம் பள்ளி உளவியலில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவை தொடர்பாக பேச உள்ளார்.