இந்தியாவுக்கு சொந்தமாக விண்வெளி நிலையம்: மோடி அரசின் இலக்கு
By : Bharathi Latha
2035 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சொந்தமாக விண்வெளி நிலையம் இருக்கும், இது "பாரதிய விண்வெளி நிலையம்" என்று அழைக்கப்படும்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), உயிரி தொழில் நுட்பத்துறை இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதாக அறிவித்த பின்னர் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உயிரி தொழில்நுட்பத்தை விண்வெளி தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான ஒத்துழைப்பைக் குறிக்கிறது, இது இந்தியாவில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புதிய சகாப்தத்தை அறிவிக்கிறது.பாரம்பரியமாக ஆய்வகங்களில் மட்டுமே இருந்த உயிரி தொழில்நுட்பத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். கோட்பாட்டு ஆராய்ச்சிக்கு அப்பால் உயிரி தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
இந்த ஒத்துழைப்பை சாத்தியமாக்குவதில் இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே ஆகியோரின் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார். இரு துறைகளின் வரலாற்றுப் பயணம் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை ஆகியவை அவற்றின் வெற்றிக்கு உந்துதலாக இருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.
Input & Image courtesy:News