Kathir News
Begin typing your search above and press return to search.

' டிஜிட்டல் கைது' என்ற ஏமாற்று வேலை - பிரதமர் மோடி எச்சரிக்கை

டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஏமாற்று வேலை நடக்கிறது. ஆன்லைன் மோசடியாளர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

 டிஜிட்டல் கைது என்ற ஏமாற்று வேலை - பிரதமர் மோடி எச்சரிக்கை
X

KarthigaBy : Karthiga

  |  28 Oct 2024 3:34 PM GMT

பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில் பேசி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் 115- ஆவது நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

நண்பர்களே 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் ஏமாற்று வேலை நடந்து வருகிறது. சட்டத்தில் டிஜிட்டல் கைது என்ற ஒன்று கிடையாது. அது வெறும் மோசடி ஏமாற்று வேலை. பொய் குற்றவாளிகள் கும்பல் இதில் ஈடுபட்டு வருகிறது .இந்த காரியத்தை செய்பவர்கள் சமுதாயத்தின் எதிரிகள். இந்த ஆன்லைன் மோசடியாளர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் ஆன்லைன் மோசடியை ஒடுக்க மாநில அரசுகளுடன் அனைத்து விசாரணை அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் இதுபற்றிய புகார்களை இணைய வழி குற்ற தடுப்புக்கான உதவி மைய எண் 1930 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம். இத்தகைய மோசடிகளை கூட்டு முயற்சிகள் மூலமாக தான் முறியடிக்க முடியும். இணையவழி குற்றங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் தங்கள் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். தற்சார்பு இந்தியா என்ற இலக்கு நமது கொள்கையாக மட்டுமின்றி நமது உணர்வாகவும் மாறிவிட்டது.

ஆசியாவின் மிகப்பெரிய இமேஜிங் தொலைநோக்கியான 'மேசி' லடாக்கில் 4,300 மீட்டர் உயரப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அது தொலைதூரத்தில் உள்ளதையும் பார்க்க உதவுகிறது .தற்சார்பு இந்தியாவின் வலிமையை அது நமக்கு உணர்த்துகிறது .இந்த பண்டிகை காலத்தில் தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை பொதுமக்கள் வலுப்படுத்த வேண்டும். தற்போது இந்தியாவில் அனிமேஷன் துறை வளர்ந்து வருகிறது. அனிமேஷன் துறையின் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோக்கள் உலகப் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்று நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அசல் இந்திய படைப்புகளை நமது இளைஞர்கள் உருவாக்கி வருகிறார்கள். அனிமேஷன் துறை தொழில் வடிவம் எடுத்துள்ளது. அது இதர தொழில்களுக்கு வலிமை அளிக்கிறது .அதுபோல் காட்சி வழி சுற்றுலா பிரபலம் அடைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News