Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டிலேயே முதல்முறையாக போர் விமானங்களை தயாரிக்க உள்ள நிறுவனம் - பிரதமர் மோடி தலைமையில் திறப்பு

நாட்டிலேயே முதன் முதலாக போர் விமானங்களை தயாரிக்க உள்ள தனியார் நிறுவன ஆலையை குஜராத் மாநிலம் வதோதராவில் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

நாட்டிலேயே முதல்முறையாக போர் விமானங்களை தயாரிக்க உள்ள நிறுவனம் - பிரதமர் மோடி தலைமையில் திறப்பு
X

KarthigaBy : Karthiga

  |  29 Oct 2024 4:46 AM GMT

குஜராத் மாநிலம் வதோதராவில் டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 சக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. ராணுவத்துக்காக மொத்தம் 56 சி- 295 ஆக விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டி.ஏ.எஸ்.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.இந்திய பாதுகாப்பு படைகளுக்கு சி-295 ரக விமானங்களை தயாரிக்க உள்ள டாடா விமான உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செசும் இணைந்து தொடங்கி வைத்தனர். பின்னர் மோடி பேசியதாவது :-

எனது நண்பரும் பிரதமருமான பெற்றோ சான்செஸ் முதல்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியா ஸ்பெயின் இடையேயான உறவுக்கு புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலையானது இந்தியா ஸ்பெயின் இடையேயான உறவை வலுப்படுத்துவதுடன் இந்தியாவில் தயாரிப்பு உலகத்துக்கான தயாரிப்பு ஆகிய திட்டங்களை வலுப்படுத்தி உள்ளது. சமீபத்தில் நாட்டின் மிகச்சிறந்த மகனான ரத்தன் டாடாவை நாம் இழந்தோம். அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பார் ஆனால் அவரது ஆன்மா மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

நான் குஜராத் முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலை மூலம் இன்று வெளிநாடுகளுக்கு ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுபோன்று இந்த ஆலையில் இருந்து எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு விமானங்களை ஏற்றுமதி செய்யும் என்று நம்பிக்கை உள்ளது. நாட்டின் பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி அமைப்பில் இந்தியா புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது.10 ஆண்டுகளுக்கு முன் உறுதியான முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இந்த உச்சத்தை அடைந்திருக்க வாய்ப்பு இல்லை. நாம் எடுத்த முடிவுகளுக்கான பலன் நம் கண் முன் இருக்கிறது. பொதுப்பணித் துறையை வலுப்படுத்த பாதுகாப்புத்துறை உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு விரிவாக்கம் செய்தோம்.

கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் ஏற்றுமதி 30 மடங்காக உயர்ந்துள்ளது. உத்திரபிரதேசத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமானப் போக்குவரத்து துறையில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள். இந்தியாவை விமான போக்குவரத்து மையமாக மாற்ற பணியாற்று வருகிறோம். வரும் காலத்தில் இந்தியாவிலேயே பயணிகள் விமானங்களும் தயாரிக்கப்படும். தற்போது இந்திய விமான நிறுவனங்கள் 1200 விமானங்கள் வாங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளன. விரைவில் இந்த ஆலை இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய பங்காற்ற போகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News