Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் நமோ ட்ரோன் சகோதரி திட்டம்: மோடி அரசு கொடுத்த புது அப்டேட்!

மத்திய அரசின் நமோ ட்ரோன் சகோதரி திட்டம்: மோடி அரசு கொடுத்த புது அப்டேட்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Nov 2024 10:47 AM GMT

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1261 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் திட்டமான நமோ ட்ரோன் சகோதரிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2024 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாய நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் சேவைகள் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை இந்தத் திட்டத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நமோ ட்ரோன் சகோதரி' திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்த செயல்பாட்டு வழிகாட்டுதல்களை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள் இத்திட்டம் மத்திய அளவில் வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உரத் துறை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் செயலாளர்களைக்கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவால் நிர்வகிக்கப்படும்.

ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலாளரைத் தலைவராகக் கொண்டு, அனைத்து பங்களிப்பாளர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட செயலாக்கம் மற்றும் கண்காணிப்புக் குழு, இத்திட்டத்தை திறம்பட திட்டமிடுதல், செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதுடன், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து தொழில் நுட்ப இனங்களில் ஒட்டுமொத்த ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் வழங்கும்.இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை ஒரு தொகுப்பாக வாங்குவதற்கு ட்ரோன் கட்டணங்களின் செலவில் 80% அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரை மத்திய நிதி உதவி வழங்கப்படும்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News