Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவை கலக்கும் இந்திய வம்சாவளி பெண்: யார் அவர் தெரியுமா?

அமெரிக்காவை கலக்கும் இந்திய வம்சாவளி பெண்: யார் அவர் தெரியுமா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Nov 2024 4:48 PM GMT

அமெரிக்க துணை அதிபரான ஜே.டி.வான்ஸின், மனைவி உஷா சிலுக்குரி வான்ஸின் குடும்பத்தினர் RSS உறுப்பினர்கள் என்றும், Emergency காலகட்டத்தில் 1975 முதல் 1977 வரை சிறையில் இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க துணை அதிபரின் மனைவி இந்திய வம்சாவளி என்பது பலரையும் தற்போது ஆச்சரியத்தில் உள்ளாக்கி இருக்கிறது. தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகி இருக்கும் நிலையில் துணை அதிபராக ஜே.டி வான்ஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். எனவே அவர் இந்தியாவின் மருமகன் என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பேசி இருக்கிறார்கள்.


டொனால்ட் டிரம்ப் அவர்கள் குடியரசு கட்சி சார்பாக மீண்டும் ஒருமுறை போட்டியிட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் 47வது அதிபராக அவர் பதவியேற்க இருக்கிறார். தனது வெற்றியை தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாடினார். அப்போது அவரது மனைவி மற்றும் தேர்தலில் அவருக்காக செயல்பட்டவர்கள் என அனைவரும் மேடையில் இருந்தனர். அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப் துணை அதிபரையும் அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். 38 வயதான ஜே.டி வான்ஸ் தான் அமெரிக்க துணை அதிபராக இருக்க போகிறார்.

ஜே.டி வான்ஸுக்கும் இந்தியாவுக்கு ஒரு நெருங்கிய பந்தம் இருக்கிறது. இவரது மனையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரி ஆவார். உஷா இந்தியாவில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். உஷாவின் தாத்தா சென்னையில் பணியாற்றியவர் என சொல்லப்படுகிறது. உஷா சிலுக்குரியின் பெற்றோர் 1970களில் அமெரிக்காவின் சான் டியாகோ நகருக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஜே டி வான்ஸும், உஷாவும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர். இவருடைய குடும்பத்தினர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்றும் இந்தியாவில் எமர்ஜென்சி காலகட்டத்தில் சிலர் நாட்டிற்காக சிறைக்கு சென்றுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை உஷாக்கு கிடைத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News