தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயன் பெற்ற விவசாயிகள் - மத்திய அரசு தகவல்
தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
By : Karthiga
பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கில் சாகுபடி விவசாயிகளின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்தியாவில் சுமார் ஒரு கோடியே 56 இலட்சத்து 90 ஆயிரம் பரப்பளவில் மூங்கில் பயிரிடப்படுகிறது. உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக மூங்கில் அதிகம் வளர்க்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 136க்கும் மேற்பட்ட மூங்கில் இனங்கள் உள்ளன.காடுகளில் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் நிலங்களில் மூங்கில் சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குதல் மூங்கில் பொருட்களை சந்தைப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தேசிய மூங்கில் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது.
இந்த திட்டத்தை பின்னர் பல்வேறு திருத்தங்களுடன் மறு சீரமைத்து தேசிய மூங்கில் இயக்கத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2018 -19 ஆம் ஆண்டு முதல் 2023-24 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளில் நாடு முழுவதும் 52,983 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மத்திய அரசின் தரவுத்தளத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 17 ஆயிரத்து 331 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மத்தியபிரதேசத்தில் 9,928 பேரும் மராட்டியத்தில் 7,476 பேர் மிசோரமில் 3,711 பேரும் பயனடைந்துள்ளனர். இந்த 2,653 பயனாளிகள் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது அதே நேரத்தில் ஆந்திரா ஜம்மு காஷ்மீர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பயனாளிகள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.