கொரோனா காலத்தில் பிரதமர் மோடி செய்த உதவிக்காக தன் நாட்டின் உயரிய விருதை வழங்க முடிவு செய்த டெமினிகா!
By : Sushmitha
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது டெமினிகாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி செய்த பங்களிப்புகளுக்காகவும் இந்தியாவிற்கும் டெமினிகாவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிகளுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு டெமினிகாவின் உயரிய தேசிய விருதான டெமினிகா அவார்ட் ஆப் ஹானர் என்ற விருதை டெமினிகா வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது
இந்த விருதை வருகின்ற நவம்பர் 19-21 வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற உள்ள இந்தியா-காரிகாம் உச்சிமாநாட்டின் போது டெமினிகா காமன்வெல்த் தலைவர் சில்வானி பர்ட்டனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குகிறார்
முன்னதாக 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியின் 70000 டோஸ்களை இந்தியா டெமினிகாவிற்கு வழங்கியது இதனால் அண்டை நாடுகளான கரீபியன் நாடுகளுக்கும் டெமினிகா ஆதரவை வழங்க முடிந்தது இதன் காரணமாகவே பிரதம நரேந்திர மோடிக்கு தன் நாட்டின் உயரிய விருதை டெமினிகா வழங்க முடிவு செய்துள்ளது
மேலும் இந்த விருது சுகாதாரம் கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியாவின் தொடர்ச்சியான உதவியையும் உலகளாவிய காலநிலை பின்னடைவு மற்றும் நிலையான வளர்ச்சியில் பிரதமர் மோடியின் தலைமையையும் பிரதிபலிக்கிறது.