முத்து வளர்ப்பு விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்:அதிகமாகும் இயற்கை முத்து உற்பத்தி!
By : Sushmitha
மத்திய அரசின் மீன்வளம் கால்நடை பராமரிப்பு பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை மாநில அரசுகள் ஆராய்ச்சி நிறுவனங்கள் பிற சம்பந்தப்பட்ட முகமைகளுடன் இணைந்து இயற்கை முத்து வளர்ப்பை ஊக்குவிக்க பல முயற்சிகளை எடுத்துள்ளது மீன்வளத்துறை எடுத்துள்ள முக்கிய முன்முயற்சிகளில் பின்வருவன அடங்கும்
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ.461.00 லட்சம் செலவில் 2307 பைவால்வ் வளர்ப்பு மேம்பாட்டுக்கு உதவி அளிக்கப்பட்டுள்ளது
சர்வதேச தேசிய மன்றங்களில் இயற்கை முத்து வளர்ப்பு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அதன் பொருளாதார முக்கியத்துவத்தை வெளிப்படுத்த முத்து விவசாயிகளுக்கு ஆதரவு
நிலையான செயல்பாட்டு நடைமுறையில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பிரிவில் உள்ள தொகுப்புகளை மேம்படுத்துதல்
ஜார்க்கண்ட் அரசுடன் இணைந்து ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் முதலாவது முத்து வளர்ப்பு தொகுப்பை உருவாக்குதல், மேம்படுத்துதல்
கடல் முத்துச்சிப்பியின் இயற்கையான எண்ணிக்கையை அதிகரிக்க, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி பகுதியில் மீன்குஞ்சு பொரிப்பகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மீன்குஞ்சுகளை இருப்பு செய்துள்ளது
குஜராத் மகாராஷ்டிரா பீகார் ஒடிசா கேரளா ராஜஸ்தான் ஜார்கண்ட் கோவா திரிபுராவின் சில பகுதிகளில் முத்து வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை மாநிலங்களவையில் மீன்வளம் கால்நடை பராமரிப்பு பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்