இந்தியா உலகளாவிய சந்தைக்கு அமோல்டு தொடுதிரைகளை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஆராய்ச்சி மையம்:தொடங்கிய ஐஐடி மெட்ராஸ்
By : Sushmitha
அமோல்டு திரைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மையம்- ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ளது
அதன்படி ஸ்மார்ட்போன்கள் டேப்லெட்டுகள் கைக்கடிகாரங்கள் அணியக்கூடிய பொருட்களுக்கான அடுத்த தலைமுறை அமோல்டு தொடுதிரைகளை உருவாக்கும் நோக்குடன் புதிய ஆராய்ச்சி மையத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தொடங்கியுள்ளது
தேசிய உயர் சிறப்பு மையமான அமோல்டு ஆராய்ச்சி மையத்துக்கு மத்திய அரசின் மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனம் ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன இந்தியாவில் தொடுதிரை உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதற்கான நாட்டின் முன் முயற்சிக்கு இந்த மையம் உதவிடும்
தொடுதிரைகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மையத்தில் இடம்பெறுவார்கள் அதிநவீன தூய்மை அறையுடன் புனையமைப்பு மற்றும் பொருட்களை பகுப்பாய்வு செய்யும் சாதனங்களும் இங்கே உள்ளன
ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 2024ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இந்த மையத்தைத் தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி ஐஐடி மெட்ராஸ் அமோல்டு ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் தேப்தத்தா ராய் ஐஐடி மெட்ராஸ் இணை முதன்மை ஆய்வாளர்களான டாக்டர் ஜி.ராஜேஸ்வரன் டாக்டர் ஜி.வெங்கடேஷ் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆஷா நங்கியா மெய்ட்டி அறிவியலாளர் ரவீந்தர் குமார் மீனா கிராண்ட்வுட் லிமிடெட் நிறுவனத்தின் டாக்டர் அமிதவா மஜும்தார் ஆசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் முன்னிலை வகித்தனர்