இந்த வருட கடைசி மனதின் குரல் நிகழ்ச்சி:பிஜி நாட்டை பிரபலம் அடைந்து வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழி!
By : Sushmitha
ஒவ்வொரு மாத இறுதியில் பிரதம நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி இந்த வருடத்தின் இறுதி நிகழ்ச்சி ஆனது நேற்று ஒளிபரப்பானது அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் கற்பவர்களின் எண்ணிக்கை பல வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது பி ஜி நாட்டில் இந்திய அரசு உதவியுடன் தமிழ் மொழி கற்பிக்கும் திட்டமும் கடந்த மாதம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் மேலும் 80 ஆண்டுகளில் தமிழ் ஆசிரியர்கள் முதல்முறையாக பி ஜி நாட்டில் தமிழ் மொழி கற்பிக்கிறார்கள் தமிழ் உலகின் மிகவும் தொன்மையான மொழி என்பது நாம் அனைவரும் அறிந்த மற்றும் கவரப்படும் விஷயமாகும்
உலகின் பல்வேறு நாடுகளிலே நமது கலாச்சாரம் மொழி இசை மற்றும் ஆயுர்வேதம் ஆகியவை தடம் பதித்து வருவதும் பெருமை அளிக்கிறது என்று பேசி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தென் அமெரிக்காவில் பராகுவே என்று ஒரு நாடு இருக்கிறது அங்கு வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்காது பராகுவேயில் ஒரு அற்புதமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது பராகுவேயில் உள்ள இந்திய தூதரகத்தில் எரிகா ஹூபர் ஆயுர்வேத ஆலோசனைகளை வழங்குகிறார் ஆயுர்வேத அடிப்படையிலான ஆலோசனைகளைப் பெற ஏராளமான உள்ளூர் மக்கள் அவரை அணுகுகிறார்கள் என்றார்
இந்த அங்கீகாரம் ஆயுர்வேதத்தை ஆரோக்கியத்தின் உலகளாவிய மருத்துவ முறையாக ஊக்குவிப்பதில் ஆயுஷ் அமைச்சகத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது உலக அளவில் ஆயுர்வேதத்தை கணிசமாக விரிவுபடுத்த ஆயுஷ் அமைச்சகம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என்பதையும் கூறினார்