மூன்று முறையாக ஆட்சியில் மும்மடங்கு வேகத்துடன் பட்டையை கிளப்பும் மோடி அரசு.!

மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதிலும் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடு பட்டு முன்னேறி உள்ளனர் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட் டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
எனது அரசின் 3வது ஆட்சியில், அனைவருக்கும் வீடுகட்டித் வீடு கட்டி தர உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு வழங்கும் வகையில் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இதற்காக ரூ.5.36 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 2.25 கோடி பேருக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களில் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான் விவசாயிகளுக்கு ரூ.41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 70 வயதை கடந்த மூத்த குடிமக்கள். ஆண்டுக்கு ரூ 10 லட்சம் மருத்துவ காப்பீடு பெறுவார்கள் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
Input & Image Courtesy: Dinamalar