Kathir News
Begin typing your search above and press return to search.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலம்.. மாற்றத்தை நோக்கிய பயணத்தில் மத்திய அரசு.!

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலம்.. மாற்றத்தை நோக்கிய பயணத்தில் மத்திய அரசு.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Feb 2025 9:51 PM IST

உத்தராகண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், இன்றைய நாள் புனிதமானது என்று கூறினார். மாநிலங்களவை உள்ளகப் பயிற்சி திட்டத்தில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய தன்கர், இன்று ஒரு நல்ல அறிகுறி ஏற்பட்டுள்ளதாகவும், அது மங்களகரமான அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் அரசியலமைப்பில், குறிப்பாக பகுதி 4-ல் அரசு கொள்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக வழிகாட்டியுள்ளனர். இந்த நெறிமுறைக் கோட்பாடுகளை அடைய அரசு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.


இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 44-ன்படி நாடு முழுவதும் குடிமக்களைப் பாதுகாக்க ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வகை செய்கிறது என்று தெரிவித்தார். நாம் அனைவரும் இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறோம். தேவபூமி உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளதற்காக அந்த அரசின் தொலைநோக்குப் பார்வையைத் தாம் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சுட்டிக்காட்டிய தன்கர், இவ்வாறு குடியேறிய லட்சக்கணக்கானவர்கள் தேசத்திற்கு சவாலாக உள்ளனர் என்றார். அவர்கள் நமது மக்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்பதால், அரசில் உள்ள ஒவ்வொருவரும் இது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

Input & Image Courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News