தனியார் பைனான்ஸில் கடன் வாங்கிய தூத்துக்குடி தம்பதிகள்:வீடு ஜப்தி செய்யப்பட்டதால் விஷம் குடித்த தம்பதிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சங்கரன் பத்ரகாளி தம்பதியினர் வீட்டை அடமானம் வைத்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி அதனை கட்ட முடியாமல் அடகு வைத்த வீடு ஜப்திக்கு வந்ததால் இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர் இதில் சங்கரன் உயிரிழந்துள்ளார்
அதாவது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சங்கரன் மற்றும் அவரது மனைவி பத்ரகாளி சங்கரன் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார் இந்த நிலையில் தனது சொந்த வீட்டை அடகு வைத்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்துள்ளார் இதற்காக மாதம் தோறும் தவணையாக 11,000 ரூபாயைக் கட்டிவந்துள்ளார்
இந்த நிலையில் சங்கரன் கடந்த சில மாதங்களாக தான் வாங்கிய கடனிற்கான மாதத் தவணையை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது மேலும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை செலுத்தும் படி தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்துக் வந்துள்ளனர் இதற்கிடையிலே தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் சங்கரனின் வீட்டில் ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்
நீதிமன்றமும் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டதை அடுத்து தூத்துக்குடி டிஎஸ்பி முன்னிலையில் சங்கரனின் வீடு ஜப்தி செய்யப்பட்டது
அப்போது வீட்டில் இருந்து பூச்சி மருந்தை பத்ரகாளி மற்றும் அவரது கணவரான சங்கரன் இருவரும் குடிக்க சிறிது நேரத்தில் சங்கரன் மயங்கி விழுந்தார் மேலும் சங்கரன் சிறிது நேரத்திலே வாயில் நுரை தள்ளி தவிக்க போலீசார் சங்கரன் நடிப்பதாக கூறி விஷம் குடித்த இருவரையும் கிட்டத்தட்ட 45 நிமிடங்களாக அங்கேயே தவிக்க விடப்பட்டுள்ளனர்
சங்கரனின் வீட்டிற்கு சீல் வைக்க முற்படும் பொழுது அவரது வீட்டில் இருந்த வளர்ப்பு பிராணிகளான நாய்கள் வீட்டை விட்டு வெளியே வர மறுத்ததால் வீட்டை சீல் வைத்த பணியாளர்கள் மூன்று நாய்களையும் வீட்டிற்குள்ளே அடைத்து வைத்து சீல் வைத்துவிட்டு சென்றுள்ளனர் இதற்குப் பிறகு விஷம் குடித்தவர்களின் நிலைமை மோசமானதா 108 ஆம்புலன்ஸை வரவழைத்து திருநெல்வேலி அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்
மருத்துவமனைக்குச் செல்லும் பொழுது சங்கரன் உயிர் இழக்க பத்திரகாளிக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலையம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்