முருகனுக்கு அரோகரா எனக்கூறிய பிரதமர் மோடி.. ஏன் தெரியுமா?

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மஹா கும்பாஹிஷேகத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி செய்தி மூலம் தமது கருத்துக்களை தெரிவித்தார். அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம், நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன், தமிழகம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆச்சார்யர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்கும் தமது அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்திய திரு மோடி, அதிபர் பிரபோவோவின் பிரசன்னம் இந்த நிகழ்வை தமக்கு மேலும் சிறப்பானதாக்கியது என்று குறிப்பிட்டார். ஜகார்த்தாவில் இருந்து உடல் ரீதியாக தொலைவில் இருந்தாலும், வலுவான இந்தியா-இந்தோனேசியா உறவை பிரதிபலிக்கும் வகையில், அந்த நிகழ்வை உணர்வுபூர்வமாக நெருக்கமாக உணர்ந்ததாக பிரதமர் கூறினார். அதிபர் பிரபோவோ சமீபத்தில் 140 கோடி இந்தியர்களின் அன்பை இந்தோனேசியாவிற்கு கொண்டு சென்றார் என்றும், அவர் மூலம் இந்தோனேசியாவில் உள்ள அனைவரும் ஒவ்வொரு இந்தியரின் நல்வாழ்த்துக்களை உணர முடியும் என்றும் அவர் கூறினார்.
ஜகார்த்தா கோவிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தோனேசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முருகப்பெருமானின் அனைத்து பக்தர்களுக்கும் அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். திருப்புகழ் பாடல்கள் மூலம் முருகப்பெருமான் தொடர்ந்து போற்றப்பட வேண்டும் என்றும், ஸ்கந்த ஷஷ்டி கவசம் மந்திரங்கள் மூலம் அனைத்து மக்களையும் காக்க வேண்டும் என்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.
Input & Image Courtesy: News