நிதி அமைச்சக ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை:பரபரவென வந்த நோட்டீஸ்!

தற்போது இணையங்களை கலக்கி வருகின்ற ஏஐ தொழில்நுட்ப செயலிகளான ஜாட்சிபிடி மற்றும் டீப்சீக் ஆகியவற்றை மத்திய நிதி அமைச்சுக்கு ஊழியர்கள் பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு அதிரடியான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது மேலும் அமைச்சகத்தின் அலுவலக கணினிகளில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட ஜாட்சிபிடி மற்றும் டீப்சீக் செயலியை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது
உலகளவில் தற்போது பெரும் போட்டியை ஏற்படுத்தி வருகின்ற ஏஐ செயலி உருவாக்கத்தில் சமீபத்தில் சீனாவின் செயலியான டீப்சீக் பெருமளவு பேசு பொருளாக இருந்தது இந்தியாவும் ஏஐ தொழில்நுட்ப செயலியை உருவாக்குவதில் தற்போது வேகம் காட்டுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் நிதி அமைச்சக ஊழியர்கள் ஜாட்சிபிடி மற்றும் டீப்சீக் போன்ற ஏஐ தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது மத்திய அரசு ஏனென்றால் இந்த செயலிகள் அரசின் தகவல்கள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளது
முன்னதாக சீனாவில் டீப்சீக் ஏஐ செயலியை ஆஸ்திரேலியா மற்றும் தைவான் உள்ளிட்ட சில நாடுகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது