இந்தியா- ஜப்பான் பேச்சு வார்த்தை: எஃகு துறையில் புதுமைகளை ஏற்படுத்த விரும்பும் மோடி அரசு.!

எஃகு துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் நாட்டின் பொருளாதார, வர்த்தக, தொழில்துறை அமைச்சகமும் இந்திய எஃகு அமைச்சகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 3-வது இந்திய-ஜப்பான் பேச்சு வார்த்தை 2025-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. மத்திய அரசின் எஃகு அமைச்சக இணைச் செயலாளர் வினோத் குமார் திரிபாதி மற்றும் ஜப்பான் வர்த்தகத்துறை துணைத் தலைமை இயக்குநர் ஹிதேயுகி உரட்டா ஆகியோர் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் இந்திய-ஜப்பான் நாடுகளிடையே தற்போதைய பொருளாதார முன்னேற்றங்கள், எஃகு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. எஃகு வர்த்தகத்தில் சர்வதேசச் சந்தை குறித்த நுண்ணறிவுகளை இரு தரப்பினரும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர். வர்த்தகம் புரிதலை எளிதாக்கும் வகையில், மத்திய அரசின் உத்திசார் முன்முயற்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள் முதலீடுகள் போன்ற நடவடிக்கைகள் அத்துறையின் நிலையான வளர்ச்சிக்கு உதவும்.
பசுமை எஃகு வகைப்பாடு போன்ற உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்திய பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர். கூடுதலாக, இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு இத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.சர்வதேச அளவிலான எஃகு வர்த்தகத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கார்பன் பயன்பாடு குறித்த நடைமுறைகளால் ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
Input & Image Courtesy: News