Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை: அரங்கேறிய திக், திக் சம்பவம்.!

சென்னையில் பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை: அரங்கேறிய திக், திக் சம்பவம்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Feb 2025 10:44 PM IST

சென்னை கிளம்பாக்கம் பஸ் நிலையத்தில் இளம் பெண்ணை பஸ் நிலையத்தில் இருந்து, ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் முத்தமிழ்செல்வன் தயாளன் ஆகிய இருவரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வடமாநிலத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் இவரது காதலனான வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரை சந்திக்க வடமாநிலத்தில் இருந்து சென்னை கீழம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு அதிகாலை இளம் பெண் வந்துள்ளார்.


காதலன் வர சற்று தாமதமானதால் அந்த இளம் பெண் சிறிது நேரம் பஸ் நிலையத்திற்குள் அமர்ந்துள்ளார். அந்த இளம் பெண் தனியாக இருப்பதை பார்வையிட்ட மர்ம நபர்கள் சிலர் இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது இளம் பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து,சாலையில் சென்றவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர் போலீசார் சாலையில் சென்ற ஆட்டோவை விரட்டி சென்றுள்ளனர் போலீசார் தங்களை பின்தொடர்வதை அறிந்த மர்ம நபர்கள் அப்பெண்ணைய் இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இளம் பெண்ணை மீட்ட போலீசார் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்கின்றனர் இளம்பெண் கடத்தப்பட்ட இந்த சம்பவம் கிளம்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் முத்தமிழ்செல்வன், தயாளன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர் மேலும் மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News