சூளைப்பள்ளத்தில் துப்புரவு பணியாளருக்கு நேர்ந்த துயரம்: மலக்குழி மரணம்,புகாரை எடுக்க அலைக்கழித்த காவல்துறை!

By : Sushmitha
சென்னை சூளைப்பள்ளத்தில் எம்ஜிஆர் நகரில் உள்ள கண்ணகி தெருவில் அடைப்பு ஏற்பட்டிருந்த செப்டிக் சுத்தம் செய்வதற்காக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி நான்கு துப்புரவு பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர் அவர்களுக்கு சம்பளம் ஏழாயிரம் ரூபாய் பேசப்பட்டுள்ளது முதல் இரண்டு நாள் வேலையை அவர்கள் முடித்தவுடன் பேசப்பட்ட சம்பளத்தில் முதல் தொகையாக 3000 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆனால் அடைப்பு அதிகமாக இருப்பதால் இதற்கு மேல் எடுக்க முடியாது என தொழிலாளர்கள் தரப்பில் கூற முழு பணியையும் முடித்தால்தான் பேசிய சம்பளம் கொடுக்கப்படும் என மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது
இதனால் மூன்றாவது நாளாக பணியில் அமர்த்தப்பட்டு இருந்த 4 துப்புரவு பணியாளர்களும் அடைப்பு எடுக்கும் வேளையில் இறங்கி இருக்கின்றனர் அப்பொழுதுதான் 48 வயதை சேர்ந்த பட்டாபிராமன் குழிக்குள் இருந்தபடியே ஒரு நீண்ட கம்பியை வைத்து அடைப்பு எடுக்க முயன்ற பொழுது மேலே மின்சார வயரில் அவரது கம்பி பட்டு மின்சாரம் தாக்கி செப்டி டேங்குள்லேயே உயிரிழந்திருக்கிறார் பட்டாபிராமன்
நேற்று பிப்ரவரி 6 காலை 9:00 மணிக்கு பட்டாபிராமன் இறந்துவிட தமிழக அரசின் 2013 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கும் அரசாணையின்படி மலக்குழி மரணத்திற்கு 30 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும் ஆனால் அதற்கு காவல்துறை மலக்குழி மரணம் என வழக்கு பதிவு செய்ய வேண்டும் இதற்காக பட்டாபிராமன் உடன் இருந்தோர் மற்றும் அவரின் மச்சான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருக்கிறார் ஆனால் அவரை ஏதேதோ காரணங்கள் கூறி புகாரை ஏற்க மறுத்துள்ளனர் காவல்துறையினர்
பிறகு வழக்கறிஞர் மூலமும் புகார் அளிக்க பட்டாபிராமனின் மச்சான் வர அந்த புகாரையும் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர் இப்படி ஒரு தொழிலாளி இறந்த புகாரை வாங்குவதற்கு காவல்துறை இவ்வளவு அலைகழித்திருக்கிறது இதில் இழப்பீடு தொகையை எப்படி அலைக்கழிக்காமல் தருவார்கள் என்பது இறந்த பட்டாபிராமன் உறவினர்களின் கவலையாக உள்ளது இதனை அடுத்து நேற்று மலக்குழியில் இறந்த பட்டாபிராமனின் புகாரை இன்று காவல்துறை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
