Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு காஷ்மீரில் ஜல் ஜீவன் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்:முக்கிய சுற்றுலா தளமாக மாறும் மன்சர் பகுதி!

ஜம்மு காஷ்மீரில் ஜல் ஜீவன் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்:முக்கிய சுற்றுலா தளமாக மாறும் மன்சர் பகுதி!
X

SushmithaBy : Sushmitha

  |  8 Feb 2025 8:46 PM IST

ஜம்மு-காஷ்மீரில் கத்துவாவின் ஜஸ்ரோட்டா கிராமத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஏழு குடிநீர் விநியோகத் திட்டங்களை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார்


25.31 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டங்களால் ஜஸ்ரோட்டா ராக் ஹோஷியாரி பட்யாரி, சக்தா சக், பதோலி சார்பாட், மங்க்தியான் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள 2584 வீடுகளை உள்ளடக்கிய 15,881 பேர் பயனடைவார்கள் என்றும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கத்துவா மாவட்டத்தில் 1369.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 303 குடிநீர் வழங்கல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார் மேலும் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து தீர்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்


அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் 100 நாட்களில் தமது நாடாளுமன்றத் தொகுதியில் செய்யப்பட்ட பணிகளை விவரித்து தற்போதைய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சேவை செய்வதில் முழு அரசு அணுகுமுறையுடன் செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்

அதோடு உதம்பூர் மாவட்டத்தின் மன்சர் பகுதி சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றும் வரும் காலங்களில் கத்துவா மாவட்டம் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறும் என்றும் உள்ளூர் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான வழிகள் அதிகரிக்கும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News