டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினரின் ஊழல் குறித்து விசாரணை தெறிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்!
டெல்லியில் ஆம் ஆத்மியினர் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்.

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவில் பா.நதா கட்சி அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பின்னர் தலைநகரில் ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து மாலையில் கட்சியினர் தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வந்தார்.அங்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பலர் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து பிரதமரை மலர் தூவி வரவேற்றனர். மோடி, மோடி என கோஷமிட்டு உற்சாகமடைந்த அவர்கள் டெல்லியில் சாதனை வெற்றி பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி,ஆம் ஆத்மி அரசை கடுமையாக தாக்கி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டெல்லியில் ஆம் ஆத்மி அரசை அகற்றியதன் மூலம் மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து பிறந்த அந்த கட்சியே ஊழலில் ஈடுபட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக சிறைக்குச் சென்ற முதல் மந்திரி துணை முதல் மந்திரி மற்றும் மந்திரிகளைக் கொண்ட கட்சியாக மாறிவிட்டது. நேர்மைக்காக தங்களுக்கு தாங்களே சான்றிதழ் அளித்துக் கொண்டவர்கள் ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர். இது டெல்லிக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் ஆகும்.
மதுபான கொள்கை ஊழல் டெல்லியை அவமதித்துவிட்டது.பள்ளிகள், ஆஸ்பத்திரிகளில் நடந்த மோசடிகள் ஏழையிலும் ஏழ்மையானவர்களை மிகவும் பாதித்தன.உலகம் அவர்களுக்கு எதிராக போராடிய போது இவர்கள் ஆடம்பர மாளிகையை கட்டிக்கொண்டு இருந்தனர் .அந்த அளவுக்கு அவர்களின் ஆணவம் அதிகமாக இருந்தது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு வெளியிடாத தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை புதிய அரசின் முதல் கூட்டத்தொடரிலேயே வெளியிடப்பட்டது. அதன்படி ஆம் ஆத்மியினர் செய்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளையடித்தவர்கள் அதை திருப்பித் தந்தே ஆக வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.