வங்கி சாராத நிதி நிறுவனங்களின் ஏல விதிமீறல் இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்:நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன்!

By : Sushmitha
திமுக எம்பி கனிமொழி வங்கி அல்லாத தங்க நகை அடகு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் நகைகளை தொடர்ச்சியாக ஏலம் எடுத்து வருகிறது மேலும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தங்க நகை கடன் வாங்கியோருக்கு திருப்பி கட்ட போதிய காலம் மற்றும் அவகாசம் கொடுப்பதும் இல்லை இந்த ஏலம் விடும் நடவடிக்கையை கட்டுப்படுத்த அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார்
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத கடன் நிறுவனங்களுக்கும் தங்க நகை கடன் வழங்குவதில் ஒரே மாதிரியான விதிமுறைகளை தான் ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது மேலும் அடகு வைக்கப்பட்ட நகை ஏலத்திற்கு வருவது பலகட்ட செயல்முறைகளுக்கும் பல நிபந்தனைகளுக்கும் பிறகுதான் வருகிறது குறிப்பாக வாடிக்கையாளர் சார்ந்த மாவட்டத்தில்தான் ஏலம் விட வேண்டும் வாடிக்கையாளர் ஏலம் விடும் பொழுது நேரில் வரவேண்டும் இல்லையெனில் ஏலம் நடத்த முடியாது ஏல தொகையை முடிவு செய்வதிலும் நிர்ணயம் செய்வதிலும் பல விதிகள் வகுக்கப்பட்டுள்ளது
இதைத்தவிர ஏல நடவடிக்கையில் ஏதேனும் நிபந்தனைகள் பின்பற்றாமல் மேலும் மேற்கொள்ளப்படுகிறது என்பதை வாடிக்கையாளர் தெரிந்து கொண்டால் அதனை உடனடியாக எங்களது கவனத்திற்கு கொண்டு வரலாம் அதேபோன்று தங்க நகைக்கான ரொக்கம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் வாடிக்கையாளர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தால் அதனையும் கவனத்திற்கு கொண்டு வந்தால் நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்று பதில் அளித்துள்ளார்
